Wednesday, November 23, 2016

நீலாயதாட்சி அம்மன் கோவில் மற்றும் தலச்சிறப்புகள் & நிகழ்வுகள்

அம்மனுக்கு என்று ஆடிப்பூரம் அன்று சாற்ற நிறைய ரத்தின கிரீடம், ஹாரம் பதக்கம் போன்ற தங்க வைர வைடூரிய நகைகள் உண்டு. (தற்பொழுது கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் சாற்றப்படுவதில்லை), 

பல வருடங்களாக a k c நடராஜன்  அவர்களின் கிளாரினட் வாத்திய இசையில் தான் அம்மனுக்கு ஆடிப்பூர உற்சவம் நிறைவு பெறும்

சுந்தரவிடங்க தியாகேசர் அருகில் சுரங்க பாதை ஒன்று தஞ்சை அரண்மனையை இணைக்கும் வண்ணம் உள்ளது. (சோழர் வரலாற்றில் இது குறித்து குறிப்பு உள்ளதாக சொல்கிறார்கள்).

 நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே திசையில் (மேற்கு) அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதது

அம்மன் மேல் பக்தர்கள் இயற்றி பாடிய பாடல்கள் பல உண்டு 

சியாமா சாஸ்திரிகள் இயற்றிய பாடல் நன்னு ப்3ரோவ ராதா3 ஓ ஜக3(த3)ம்பா3 

முத்துசாமி தீக்ஷிதர் இயற்றிய பாடல் (அம்பா3 நீலாயதாக்ஷி கருணா கடாக்ஷி) இங்கு உள்ளது http://www.vgovindan.info/nadopasaka/Dikshitar/A/ambA%20nIlAyatAkshi-nIlAmbari.html#Tamil

வை ராமசாமி என்பர் எழுதிய பாடல் (அன்பே, அமுதே, அகிலலோக நாயகி நீலாயதாக்ஷியேஇங்கு உள்ளது.http://www.vallamai.com/?p=60828

திருநாகைக்காரோணம் திருத்தல புராணம் வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை (டாக்டர் உ வெ சாமிநாதய்யரின் குரு) என்பவரால் இயற்றபட்டு புத்தக வடிவில் கிடைக்கிறது.இது திருவாடுதுறை ஆதீனத்தால் 1970 ஆம் ஆண்டு வெளியிடப் பட்டுள்ளது (இந்நூல் இக்கோவில் முக்தி மண்டபத்தில் தான் வெளியிடப்பட்டது, ஆண்டு 1890)

வரலாற்றில் இந்த திருத்தலத்தை நீர் சுனாமியாக அணைக்கும் என்று முன்பே அறிந்ததினால் சுவாமி இருக்கும் கோவில்கள் (இன்றும் சில  மடவிளாக வீடுகள்) உயர்த்தி கட்டி இருப்பார்கள் ஏழுஎட்டு படிகள் ஏறி உள்ளே செல்வது போல், அவை  நீலாயதாட்சி அம்மன் கோவில் ஸ்வாமி சந்நிதி, மலைஈஸ்வரன் கோவில் ஸ்வாமி சந்நிதி, சட்டையப்பர் கோவில் சந்நிதி போன்றவை  உள்ளன.

திருவையாறுக்கும் நாகப்பட்டினத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு அது ஏழூர் சப்த ஸ்தான திருவிழா (திருவையாற்றில் நந்திகேஸ்வரர் திருக்கல்யாணம் இங்கும் திருமணக்காட்சி உண்டு)

காளமேகம் புலவர் (12ஆம் நூற்றாண்டு) அவர்களினால் புகழ் பெற்ற நாகை பற்றிய செய்யுட்கள் 

பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு
நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை

கத்‌தும் கடல் நாகை காத்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசி வரும்
குத்தி உலையில் இட ஊர் அடங்கும்.
இலையிலிட வெள்ளி எழும்.

 சோறெங்கே விற்கும் என்றபொழுது
‘தொண்டையிலே விக்கும்’ என்றொரு பையன் சொன்னானாம்.

  உடனே காளமேகம் ‘கன்று வேம்புங் கசக்குமோ?’ வென்ன,
அச்சிறுவன் ‘மூலமும் கசக்கும்’ என்றானாம்.

  விளைந்து சாய்ந்து கிடக்கும் நெற்பயிரைப் பார்த்து ‘மஞ்சட்
பூசி மலர்ந்து கிடக்கிறது’ என்ற காளமேகத்தைப் பார்த்து
அறுப்புக்கு வந்திருந்த பையன் ‘அறுத்துக் கட்டுகிற சாதிதானே’
என்றானாம்

இலங்கை யாழ்ப்பாணத்தில்  திருநெல்வேலி என்ற தலத்திலும் காயாரோகணேஸ்வரரும் நீலாயதாட்சியும் குடி கொண்டு இருக்கிறார்கள்