நாகை மாவட்டம்:-
இந்து சமய பாரம்பரியத்திற்கு பிரசித்தி பெற்றது நாகை மாவட்டம் ; இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்று. மேலும் ' நேவல் பட்டினம் '(நாகப்பட்டினம்) - கப்பல்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
(இப்ப காரைக்கால் போர்ட் தான் பாபுலர், கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் புத்த விஹாரையும், நாகைத் துறை முகமும் வரும்)
நீலாயதாட்சி அம்மன் கோவில் :-
இக் கோவில் நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து, 2கீ.மீ.தூரத்தில் உள்ளது. சக்தி பீடங்கள் 64ல் ஒன்று.
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, நாகை நீலாயதாட்சி
அப்பறம், ஆருர் கமலாட்சி அப்படின்னு புகழ் பெற்றதுங்கோ!!!
தல வரலாறு:-
இது, ஆதி சேஷன் நாகராஜனால் பூஜிக்கப் பெற்றதால், நாகை என்றும், புண்டரீக முனிவரை இறைவன் தனது தேகத்தில் ஆரோகணம் செய்துகொண்டமையால், காயாரோகணம் என்று பெயர். இது மருவி, காரோணம் என்றாயிற்று. அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி நல்கிய தலம்.சுந்தரருக்கு இறைவன் குதிரை, முத்துமாலை, பட்டு முதலானவை வழங்கிய தலம்.
சப்த விடங்க ஸ்தலங்களில் கோமேதக லிங்கம் தியாகராஜர் சன்னிதியில் பூஜிக்கப்படுகிறது
லிங்கம் திருட்டு போய் விட்டதினால் மீண்டும் பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்டுள்ளது
கோயிலின் பிரதான ராஜகோபுரம்:-
---->எல்லா கோபுரங்களின் தலைவன்
(அதான் பெரிய மைக் செட்டு வச்சுருக்காரு!!!)
---->"கோபுரதரிசனம் கோடி புண்ணியம்". நல்லா தரிசனம் பண்ணுங்க.

ராஜகோபுரம் வேறு ஆங்கிள்ல:-
---->நடைபாதை(பாதையில் இருந்து கீழே இறங்கினால் புல்லு குத்தும்)

கொடிமரம்:-
---->அருகே இருப்பது ராஜதானி மண்டபம். அதனுள் அதிபத்த
நாயனாரின் வரலாற்றுப் படக்கதையை நாம் காணலாம்.
---->ஆடிப்பூரத்தன்று அம்மன் வெண்ணிற ஆடையில்
அலங்கரிக்கப்பட்டு ; இந்த மண்டபத்தின் நடுவில்
அமர்ந்திருந்து நமக்கு தரிசனம் தருவாள்.
---->மாலை நேரங்களில் இந்த மண்டபத்தில் அமர்ந்து
மாமரங்களின் குளிர்ந்த காற்றை சுவாசிக்கலாம்.
வேறு ஆங்கிள்ல கொடிமரம் :-
----> கீழே இருப்பது பழைய கொடி மரம்

அழுகணி சித்தர் பீடம் :-
---->அழுகணி சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடம்.
----> பதிணெண் சித்தர்களில் ஒருவர்.

கோபுரத்தில் முருகன் சிலை:-
---->சிலை பழசுதான் ஆனா அங்கே முளைத்திருக்கும் செடிகள் புதுசு
---->அங்கே தெரிவது கோவில் மாட்டு வண்டிகள்.
---->அதன் அருகே தான் 32 அடி விஸ்வரூப விநாயகர் சிலை
வைக்கப்பட்டுள்ளது.
வசந்த மண்டபம்:-
---->திருவிழா காலங்களில் உற்சவர் வீதி உலா செல்லும் வழி.
---->32 அடி விநாயகர் இந்த வாயில் வழியாகத்தான் வெளியே வருவார்.
ராஜகோபுரம் அருகே இருக்கும் பழனி ஆண்டவர் சந்நிதி:-
----> இங்கும் பழனி ஆண்டவர் இருக்கிறார்.
----> கோபுர வாயிலில் ஒரு வண்டி நிற்கிறது.
[நோ பார்கிங் இல் தான் வண்டிய நிறுத்த கூடாது.
கோபுர வாயிலில் தாரளமாக நிப்பாட்டலாம்.]

யாகசாலை:-

கோபுரத்தில் கண்ணன் சிலை:-

சுவாமி கோவிலின் உட்பிரகாரம்:-
---->இங்க தான் உட்கார்ந்து பத்தாவது, பன்னெண்டாவது பப்ளிக் எக்ஸாம் படிப்பொம் (இப்பொ அனுமதி கிடையாது)
பாலிடெக்னிக் அண்ணாச்சி எல்லாம் கடலை பருப்பு வருத்தத வச்சு தின்னுக்கிட்டெ படிப்ப உரு பொடுவாங்க


மடப்பள்ளி:-


மடப்பள்ளி:-
---->திருவிழா காலங்களில்
அருகில், தெரிகிற மேடையில் தான் கலை நிகழ்ச்சிகள் எல்லாம்
கோவிலின் வெளிப்பிரகாரம்:-
அதிபத்த நாயனார் தனிக்கோவில்:-
---->குட்டி நந்தவனம் அருகில், பைப் இருக்கு கை,கால் கழுவ
----> மூலவர் சிலை நுணுக்கமா இருக்கும்.
----> சுனாமி போது நூற்றுக்கணக்கான் குடும்பம் வசித்தது ப்ரகாரத்தில் தான் (சகலமும் கோவில் உள்ளயே)
மாங்காளி, வல்லப கணபதி தனிக்கோவில்:-
---->காளி வரப்ப்ராஸாதி, மாமரம் பக்கத்திலெ பரந்து இருக்கும்,
(குட்டி மாம்பழம் சூப்பரா இருக்கும்)
----->பாதைக்கு எடது பக்கம் தான் இன்னொரு நந்தவனம் இருக்கு
புண்டரீகர் குளம்:-
----> (குன்றி குளம்னா தான் எல்லாருக்கும் தெரியும்ங்க..)
----> கால பைரவர் வழிபாடு கூட்டமா இருக்கும்.குழு போட்டு
பராமரிக்கறாங்க, சுத்தமா இருக்கும், மழைத்தண்ணி
சேகரிக்கறாங்க குளிக்கலாம்... (1 ரூபா)

இரவு நேர கோபுரக்காட்சி:-
மகா நந்தி சிலை:-
நாகாபரண விநாயகர் தனிக்கோவில் :-
சிறப்பு பண்டிகைகள்:-
----> நித்திய மாசம் ப்ரதோஷ வழிபாடு
(சிவ அடியார்கள் சபை இருக்கு,
தேவாரம் எல்லாரும் பாடுவாங்க)
மாதம் பண்டிகைகள்
வைகாசி - விசாகம் வசந்தன் உற்சவம்
(தியாகராஜர் புறப்பாடு குலுக்கலா இருக்கும்)
ஆனி - பஞ்சக்ரோசஉற்சவம்
(பார்வதி-பரமசிவன் திருக்கல்யாணம்)
ஆடி - அம்மனுக்கு 10 நாட்கள் ஆடிப்பூரத் திருவிழா
ஆவணி - விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் - 32 அடி
விஸ்வரூப விநாயகர் - விமரிசையான உற்சவம்,
நாகை முதல் நாகூர் வரை பிரமாண்டஊர்வலம்
(ஆசியாவிலேயெ பெரிய வழிபாடு ஊர்வலம்
என் நம்ப படுகிறது)
புரட்டாசி - நவராத்திரி
கும்பாபிஷேகம் ஏற்பாடு ஆகியிருக்கிறது, அன்பர்கள் உதவி தேவைப்படுகிறது